மாணவியின் சோகத்தை கேட்டு 10 நிமிடம் மேடையில் கண் கலங்கிய சூர்யா. வைரலாகும் வீடியோ.

0
4495
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது தம்பி கார்த்திக்கும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர்களது அப்பா சிவகுமார் ஒரு நடிகர். இவர்களது குடும்பமே கலை குடும்பம். சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வந்த காப்பான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் தயாராகி வருகிறது. இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார். விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவுவது போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். சமூக தீமைகளை நீக்குவதற்கும், அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நிறுவனர் நடிகர் சூர்யா சிவகுமார் ஆவார். இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வந்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இதை ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவர்கள் பல வருடங்களாக செய்த நிலை தற்போது நடிகர் சூர்யா அவர்கள் இதை எடுத்து செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : பொது நிகழ்ச்சி மேடையில் கணவரை கன்னத்தில் அறைந்த பாலிவுட் நடிகை. வைரலாகும் வீடியோ..

- Advertisement -

சமுதாயத்தின் பின் தங்கி உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி அமைப்பது இதனுடைய முக்கிய நோக்கம். படிக்கும் திறனும் ஆர்வமும் கொண்டிருக்கும் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை தேடி அவர்களுக்கான நிதி உதவி வழங்க பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய பேச்சு அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பிலும் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் “வித்தியாசம் தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக” என்று இரண்டு நூல்களை வெளியீட்டு விழாவில் வெளியிட்டு உள்ளார்கள். இந்த விழா சென்னை தி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மேடையில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பேசினார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்களையும், கோரமான சம்பவங்களையும், குடும்ப சூழ்நிலையும் குறித்து மனதை பதறவைக்கும் அளவிற்குப் பேசினார்.

-விளம்பரம்-

இதைக் கேட்டு நடிகர் சூர்யா அவர்கள் மேடையிலேயே கண் கலங்கினார். அது மட்டும் இல்லாமல் 10 நிமிடம் கண் கலங்கியவாறு உட்கார்ந்து இருந்தார். பின்னர் பேச்சை முடித்த அந்த மாணவிக்கு தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறி உள்ளார் நடிகர் சூர்யா. இந்த சம்பவம் அங்கு இருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதுமட்டும் இல்லாமல் இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த மாணவிக்கு ஆறுதலையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement