ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர்.இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.
இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியிடம் அளித்து இருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, இன்று அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார்.
வாடகை தாய் விவகாரம் :
அப்போது அவரிடம் நயன்-விக்கியின் இரட்டை குழந்தை குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள்.அதற்கு அவர் கூறியிருந்தது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த சர்ச்சை அதிகமாகத்தான் இருக்கிறது.21 வயது முதல் 36 வயதுக்குள் இருப்பவர்கள் பெற்றோர்கள், கணவரின் அனுமதியுடன் கருமுட்டையை வாடைக்கு கொடுக்கலாம். இது விதிமுறைக்குட்பட்டிருக்கிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் குழந்தை விதிமுறைக்குட்பட்டதாக கூட இருக்கலாம்.
விரைவில் விசாரணை :
இதை DMS மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது. அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் குழந்தை பெற்றிருக்கிறார்களா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்த பிறகு தான் தெரியும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணையை துவங்கியுள்ளது. மருத்தவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
யார் அந்த தோழி :
மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் நயன்தாரா விக்கிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த வாடை தாய் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா அங்கு தான் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரியை படித்து முடித்தார். மேலும், தன்னுடன் படித்த தோழிகளுடன் இன்னமும் நயன்தாரா தொடர்பில் இருக்கிறார். நயன்தாரா பல சர்ச்சைகளை சந்தித்தபோது அவருக்கு ஆதரவாக அவரது தோழிகள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
வாடகை தாய்யிடன் விரைவில் விசாரணை :
தற்போது அந்த தோழிகளில் ஒருவர் மூலமாக நயன்தாரா வாடகைத்தாய் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் என்ற பேச்சுக்களும் எழுந்திருக்கிறது மேலும் அந்த வாடகைத்தாய் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் இந்த விவாகரத்தில் விதிகள் மீறப்பட்டு இருக்கின்றனவா என்பது குறித்து நயன்தாரா மற்றும் அந்த பெண்ணிடம் விசாரணை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது