அந்த ரோலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க – நயன் கொடுத்த ஷாக்

0
1191
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்

-விளம்பரம்-

இந்த படத்தில் அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு முன்னரே நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் வாடகை தாய் முறையில் 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.

- Advertisement -

வாடகை தாய் சர்ச்சை :

நயன்தாரா திருமணமாகி சில மாதங்களில் வாடகை தாய் முறையின் மூலம் குழந்தையை பெற்றதினால் அந்த நேரத்தில் இது தான் வைரலான செய்தியாக இருந்தது. மேலும் இந்த பிரச்னை தமிழ் நாட்டு அரசின் மருத்துவ அமைச்சர் வரையில் சென்றது. இதனால் சில காலம் நடிக்காமல் இருந்த நயன்தாரா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டார். நயன்தாரா விரைவில் ஜாவான என்ற பாலிவுட் படத்தில் நடக்க உள்ளார்.

நயன்தாரா நடிக்கும் படங்கள் :

ஜாவான் படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார், மேலும் இப்படத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டாரான ஷாரூக்கானுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் நயன்தாரா. மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து பாலுவுட் சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கிறார் நயன்தாரா. மேலும் தமிழில் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள “இறைவன்” படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

என்னிடம் அட்ஜஸ்மென்ட் கேட்டார்கள் :

இப்படி குழந்தை பிறப்பதற்கு முன்னரும், குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன்தாரா `தான் சினிமாவில் எதிர்கொண்ட இன்னல்களை பற்றி நிகழ்ச்சி ஒற்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில் அட்ஜஸ்மென்ட் செய்தால் தன்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக சிலர் குறியுள்ளதாகவும், தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு தேவையில்லை என்று உதறி தள்ளியதாகவும் நயன்தாரா அந்த நிகழ்ச்சில் பேசும்போது கூறியுள்ளார்.

வெளியில் வரும் உண்மைகள் :

மேலும் அவர் பேசுகையில் தனக்கு தன்னுடைய நடிப்பின் மீதும், திறமையின் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார். சினிமா உலகில் பிரபல விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் சினிமா உலகில் அட்ஜஸ்மென்ட் குறித்து பல விஷியங்களை கூறியுள்ள நிலையில் தற்போது நடிகைகள் பலரும் படத்திற்காக படுகைக்கு அழைக்கும் விஷயம் குறித்து பகிர்ந்து கின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவிற்க்கே இந்த நிலைமை என்ற மற்ற நடிகைகளின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

Advertisement