தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. சமீப வருடமாகவே இவர் நடித்த படங்கள் பலவும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதே போல சிறந்த நடிகைக்கான விருதை பல முறை பெற்று இருக்கிறார் நயன்தாரா. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா கோல்டன் விசாவை பெற்றுவிட வேண்டும் என்று மும்முரம் காட்டி வருவதாக ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது.
2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாக்களை வழங்குகிறது.
கோல்டன் விசா சலுகை என்ன :
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Visa) இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
கோல்டன் விசா பெற்ற நடிகைகள் :
தமிழ் நடிகை திரிஷாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதன் மூலம் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற சிறப்பை பெற்றார். இவரை தொடர்ந்து மீனா, அமலா பால், பார்த்திபன்,விஜய் சேதுபதி போன்றவர்களுக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தென்னிந்திய சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து வரும் நயன்தாராவிற்கு இன்னும் இந்த கோல்டன் விசா கிடைக்கவில்லை.
ஏக்கத்தில் நயன்தாரா :
தற்போது விஜய் சேதுபதி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தான் சமந்தா மற்றும் நயந்தாரா நடித்துள்ளனர். சினிமாவில் வருவதற்கு முன்னர் துபாயில் ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இன்று அந்த அரசால் கோல்டன் விசா அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. அதே போல தனக்கு பின்னால் வந்த அமலா பாலுக்கு எல்லாம் கோல்டன் விசா கிடைத்துவிட்டது.
கோல்டன் விசா வாங்க மும்மரம் காட்டும் நயன் :
ஆனால், முன்னணி நடிகையாக இருந்தும் தனக்கு இன்னும் அந்த கெளரவம் கிடைக்கவில்லை என்றஏமாற்றத்தில் இருக்கிறாராம் நயன்தாரா. இதனால் எப்படியாவது அதனை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறாராம் நயன்தாரா. அதற்கு விக்னேஷ் சிவனுடம் தன்னால் முடிந்ததை செய்தே ஆகவேண்டும் என்று தன் காதலிக்காக கோல்டன் விசா வாங்க போராடி வருகின்றாராம்