தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் இருவரும் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
இதற்காக இருவரும் அமெரிக்கா பறந்துள்ளனர். அங்கே
அழகிய நகரமான லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளனர். அங்கு தான் அவர்கள் பிரமாண்டமாக தங்களது புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.