ஒன்றாக இணைந்த முதல் படமே அமோகம் – சர்வதேச விருதை வென்ற முதல் தமிழ் திரைப்படம். குஷியில் நயன் – விக்கி

0
684
nayan
- Advertisement -

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பார்கள். நயன்தாரா, இளையதளபதி விஜயின் “பிகில்” படத்தில் நடித்தும் , அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்திலும் நடித்து உள்ளார். தமிழ்மொழியில் மட்டும் இல்லாமல் இவர் மலையாளத்தில் நிவின் பாலி உடன் நடிக்கும் லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் நடித்துள்ளார். அதே போல இவரது காதலரான விக்னேஷ் சிவன் போடா போடி, தான சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியவர் தான்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.அதே போல என்ன தான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் தனது நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். என்னதான் நயன் ஒரு பிஸியான நடிகையாக இருந்து வந்தாலும் விக்னேஷ் சிவனால் ஒரு வெற்றிகமான இயக்குனராக வளம் வர முடியவில்லை.

இதையும் பாருங்க : தலைவன் வடிவேலு பாட்டுக்கு ஆட்றது தான் சந்தோசம் – ‘வாடி பொட்ட புள்ள’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஷிவானி. வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தனர். இந்த தயாரிப்பு நிறுவனம் தான் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்தை தயாரிக்கிறது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர்.

இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.கூழாங்கல் திரைப்படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், கடந்த சில தினங்களுக்கு முன் திரையிடப்பட்டது. இந்நிலையில், கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-
Advertisement