தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.
இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார். ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று விக்னேஷ் சிவன் கேட்டபோது அதை தள்ளிப் போட்டார் நயன்தாரா என்றும் வதந்திகள் வந்தது.
இதையும் பாருங்க உலகத்திற்கு என்னுடைய உலகத்தை அறிமுகம் செய்கிறேன். முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அசீம்.
ஆனால், சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடிகை நயன்தாரா ஜீ சினி விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எப்போதும் இதுபோன்ற விழாக்களில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்வார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் அவர் தனியாக வந்திருந்ததால் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மோதல் ஏற்பட்டு விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் நயன்தாரா ஒரு புகைப்படத்தில் மிஸஸ் விக்கி என்ற ஸ்னாக்ஸ் கவரை வைத்து முகத்தை மூடிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் நயன்தாரா தற்போதும் ‘மிஸஸ் விக்கி’ என்று மறைமுகமாக கூறி தங்கள் காதலில் எந்தவித விரிசலும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் விக்னேஷ் சிவன்.