திருச்சி குலதெய்வ கோவிலுக்கு விக்னேஷ் சிவன்- நயன்தாரா சென்றிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன் காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.
இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம் என்றும், தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாகவும் கூறியிருந்தார். தாங்கள் மிகவும் private ஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:
பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும் வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார்.
நயன் நடிக்கும் படங்கள்:
இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் O2, காட்பாதர், கனெக்ட் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
திருச்சி குலதெய்வம் கோவில்:
அந்த புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருச்சி கோயிலுக்கு சென்று உள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இதுவரை இருவருமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்-விக்கி கோவிலுக்கு செல்ல காரணம்:
மேலும், இவர்களுடைய திருமணம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் திருச்சியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருக்கின்றார்கள். இவர்களை காண அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து சிலர் இவர்கள் கல்யாணம் குறித்து கேட்க சென்றுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.