விசுவாசம் படத்தில் நயன்தாராவின் ‘லுக்’ இதுவா..! வைரல் புகைப்படம் இதோ !

0
732
nayanthara

இயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் ‘விசுவாசம்’ படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்திற்கான ஷூட்டிங் ஆந்திர மாநிலம் ஹைதராபாத், ராஜ்முந்த்ரி போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நயன்தாராவின் கெட் அப் குறித்த அடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். ஆனால், தல அஜித்தின் படம் என்றதும் கதை, சம்பளம் என்று எதை பற்றியும் விசாரிக்காமல் “விசுவாசம்” படத்தில் நடிக ஒப்புக் கொண்டார் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த படம் கிராமம் மற்றும் சிட்டி சம்மந்தபட்ட கதையாக இருக்கும் என்று ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதில் நடிகை நயன்தாரா ஒரு மருத்துவராக நடித்துள்ளார் என்று சமீபத்தில் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதே நடிகை நயன்தாரா இந்த படப்பிடின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

Actress Nayanthara

ஆனால், அந்த புகைப்படம் வேறொரு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் நடிகை நயன்தாரா இன்று தான் “விசுவாசம் ” படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். மேலும், நடிகை நயன்தாரா தற்போது தமிழில் 3 படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.