அத்திவரதர் கருவறையில் நயனை போட்டோ பிடித்தது யாருனு பாருங்க.! எல்லாம் காசுதான் காரணம்.!

0
12393
Nayantara

கடந்த ஒரு மாத காலமாக அத்திவரதர் தான் பக்த கோடிகளின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அத்திவரதரை தரிசிக்க பல லட்ச பக்த கோடிகள் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் அத்திவரதர் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். நேற்றய முன் தினம் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் அத்திவரதரை தரசிப்பதற்கு வந்தனர்.

இதையும் பாருங்க : இதுக்குமேல பேசின சாவடிச்சிடுவ.! கவினிடம் டோஸ் வாங்கி ஓடிய கஸ்தூரி.! 

- Advertisement -

அத்தி வரதர் தரிசனம் முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அத்திவரதரை நேரில் சென்று தரிசித்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15 ) லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் என்று அத்திவரதரை தரிசித்தார்.

nayanthara

நயன்தாராவை கண்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளோம் என்பதையே மறந்து விட்டு ஆளாளுக்கு கையில் செல்போனை எடுத்து வீடியோ எடுக்க துவங்கிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், நயன்தாரா அத்தி வரதரின் கருவறையில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இதில் என்ன கொடுமை என்றால் அந்த புகைப்படத்தை அந்த கோவிலில் இருந்த ஒரு அர்ச்சகரேய எடுத்துள்ளது. ஆனால், இது போல சாமானிய பக்தர்களுக்கு நடக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி.

Advertisement