இதுக்குமேல பேசின சாவடிச்சிடுவ.! கவினிடம் டோஸ் வாங்கி ஓடிய கஸ்தூரி.!

0
15013
kavin
- Advertisement -

குளத்தை அமைதியாக போல அமைதியாக இருந்த பிக் பாஸ் வீடு வனிதா சிறப்பு விருந்தினராக சென்ற பின்னர் சுனாமி வந்த கடலை போல சீறி பாயா துவங்கியுள்ளது. உள்ளே சென்ற முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களை சீண்டி சண்டை மூட்டி வரும் வனிதாவால் தற்போது பிக் பாஸ் வீடே இரண்டாக பிரிந்துவிட்டது.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து விவாதம் ஒன்றை நடத்தினர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சேரன் தற்போது பெண்களுக்கு ஆதரவாகவும், லாஸ்லியா தற்போது ஆண்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். எனவே, விரைவில் சேரன் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் பனிப்போர் வெடித்தாலும் ஆச்சர்யமில்லை.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷனில் கவின், லாஸ்லியா, முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். மேலும், இந்த வாரம் நடைபெற்று வரும் ஒட்டிங்கில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது. எனவே, இந்த வாரம் அபிராமி தான் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இன்றுடன் வாக்கெடுப்பு நிறைவடைகிறது. எனவே, இன்று ஒரு நாள் மிகப்பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை எனவே, இந்த வாரம் அபிராமி தான் வெளியில் செல்வார் என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது. இருப்பினும் அது நாளை உறுதியாக தெரிந்துவிடும்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement