பிக் பாஸ் வீட்டில் ஒருநாள் மட்டும் நயன்தாரா ஏன் தெரியுமா ?

0
2944
nayan-kamal

ஓவியா இருந்த வரை விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ வேற லெவலில் இருந்தது. ஆனால் தற்போது அதனுடைய டிஆர்பி சரிந்த வண்ணமே உள்ளது. இதனை அடுத்து ஓவியாவை எப்படியாவது மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் விஜய் டிவி தீவிரம் காட்டிவருகிறது.

அதோடு ஓவியா இல்லாத இந்த சமயத்தில் சரிந்த டிஆர்பியை எப்படியாவது உயர்த்த பல்வேறு யுக்திகளை கையாண்டுவருகிறது விஜய் டிவி. சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள வேலைக்காரன் படத்தின் சாட்டலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதால், அந்த படத்தை வைத்து பிக் பாஸ் ஷோவையும், பிக் பாஸ் ஷோவை வைத்து படத்தையும் ப்ரொமோட் செய்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

சிவகார்திகேயனையும், நயன்தாரா ஒரு நாள் பிக் பாஸ் வீட்டில் தங்கவைத்தால் டிஆர்பி எகிறும் அதோடு படத்தையும் ப்ரொமோட் பண்ண மாதிரி இருக்கும் என்பதே விஜய் டிவியின் எண்ணமாக இருக்கும் என தெரிகிறது. இதற்காக சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் இதற்கு சரி சொல்லிவிட்டார் என்ற தகவலில் வெளியில் வந்துள்ளது. அதோடு நயன்தாராவிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

kamalவிரைவில் சிவகார்திகேயனையும் நயன்தாராவையும் பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்கலாம்.