அஜித் 59 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகை நஸ்ரியா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

0
360

அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கான கதாபாத்திரத்திற்கான தேர்வு படு மும்மரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நஸ்ரியா, இயக்குனர் ஆத்விக், பிரபல செய்தி தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே கமிட் ஆகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

அதில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும், இரண்டாவது கதாபாத்திரத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணியும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று புத்தாண்டை முன்னிட்டு துவங்கி இருப்பதாக நடிகை நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.