கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நஸ்ரியா.

0
242512
Nazriya Nazim

தமிழ் சினிமா மலையாளத் திரையுலகில் இருந்து நயன்தாரா தொடங்கி சாய்பல்லவி, அமலாபால் என்று பல்வேறு நடிகைகளை இறக்குமதி செய்துள்ளது. மேலும், தமிழ் ரசிகர்களுக்கு மலையாள நடிகைகள் மீது ஒரு தனி ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நஸ்ரியாதான் மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் நடிகை என்று சொல்லலாம். நஸ்ரியா, ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால், இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

மேலும், மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சியான ஏசியாநெட் என்ற தொலைக்காட்சியில் மஞ்சு ஸ்டார் சிங்கர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ஆரம்பத்தில் மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நஸ்ரியா, பின்னர் தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான நேரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் வெளியான பின்னர் நஸ்ரியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினார்கள். நேரம் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் இவர் நடித்த ராஜா ராணி திரைப்படமும் இவருக்கு நல்ல ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

- Advertisement -

ஆனால், நேரம் மற்றும் ராஜா ராணி என்ற இரு படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் நஸ்ரியா. இறுதியாக தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான திருமணம் எண்ணும் நிக்கா என்ற படத்தில் கூட நடித்திருந்தார். ஆனால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நஸ்ரியா கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பாசமாய் ஒரு முத்தம்

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார் திருமணத்திற்குப் பின்னர் நடிகை நஸ்ரியாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கினார் நஸ்ரியா. சமீபத்தில் இவர் நடித்துள்ள ‘ட்ரான்ஸ்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகி இருந்தது.

அந்த போஸ்டரில் நடிகை நஸ்ரியா குட்டையான பாவாடை அணிந்து வாயில் தம்முடன் இருக்கும் கோலத்தைக் கண்டு ரசிகர்கள் மிகவும் அடைந்தனர். இந்த நிலையில் நடிகை நஸ்ரியா தனது கணவர் பகத் பாசிலுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நஸ்ரியா கவர்ச்சியான உடையில் இல்லாத போதும், இதுபோன்ற புகைப்படத்தை நஸ்ரியா பதிவிட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement