‘நீ நான் காதல்’ சீரியல் நடிகைக்கு ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் – அவரே சொன்ன தகவல்

0
182
- Advertisement -

‘நீ நான் காதல்’ சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று நீ நான் காதல். இந்த சீரியல் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஹீரோவாக பிரேம் ஜாக்கோவும், ஹீரோயின் ஆக வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் சங்கரேஸ் குமார், நவீன் முரளிதரன், சரவணன், ஷீலா, தமிழ்ச்செல்வி, கிரிஷ், சங்கீதா பாலன், ஹர்ஷா நாயர், மதுமிதா இளையராஜா பாலன் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் ஒரு வருடத்தை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

நீ நான் காதல் சீரியல்:

மேலும், இந்த சீரியலில் ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தனுஷிக்.
இவர் இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு மீடியாவில் சாதிக்க வேண்டும் என்று கனவோடு தான் சென்னைக்கு வந்தார். பிரபலமான தொகுப்பாளராக வேண்டும் என்பது தான் இவரின் ஆசை. இதனால் இவர் நிறைய ஆட்டிசன் போனார். அப்போது தான் இவருக்கு விஜய் டிவியில் நீ நான் காதல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனுஷிக் நிச்சயதார்த்தம்:

இந்த சீரியலில் இவர் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இவர் மணி என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் ஒரு பிசினஸ் மேன். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

தனுஷிக் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தனுஷிக், நடிப்பைவிட தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஒரு பிரபல சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கேட்டு போனபோது, நீங்க குண்டா இருக்கீங்க. அதனால பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வாங்க என்று சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் ஆடிசனுக்கு போகும்போது இது மாதிரி நிறைய விஷயங்களை சொன்னார்கள். இப்பவும் யாராவது ஆங்கரிங் பண்ண வாய்ப்பு இருக்கு என்று சொன்னால் முதலாக ஓடிப் போய் விடுவேன்.

திருமணம் குறித்து சொன்னது:

சின்ன சின்ன ரோல் பண்ணிட்டு இருந்தேன். இப்ப முக்கியமான ரோலில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. மேலும், எங்களுடையது பக்கா அரேஞ்ச் மேரேஜ். இப்ப நிச்சயதார்த்தம் முடிந்திருக்கு. அதனால் இப்பதான் லவ் பண்ண ஆரம்பித்து இருக்கிறோம். அவர் பிசினஸ்மேன். கூடிய விரைவிலயே திருமணம் பற்றிய தகவலை அறிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement