சமீபகாலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகைகள் குறித்து பல நல்ல செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணமே இருக்கிறது. நடிகைகளின் திருமணம், குழந்தை பிறந்த விஷயம், நிச்சயதார்த்தம் என்று பல நற்செய்திகள் வருகிறது. அந்த வகையில் தற்போது சீரியல் நடிகை நீலிமாவுக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகளே அதிகம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நீலிமா ராணி.
உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அதனை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.
நீலிமா நடித்த சீரியல், படங்கள்:
இவர் நடித்த முதல் சீரியல் 1998ல் தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல். அதோடு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். இதுவரை இவர் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நீலிமா குடும்ப வாழ்கை:
தற்போது இவர் தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார். இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு இவர் தனது 13 வது திருமண நாளை கொண்டாடினார்.
நீலிமா இரண்டாவது குழந்தை:
இதே நாளில் தான் இவர் இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். மேலும், இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் தான் அடிக்கடி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதியே இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை தற்போது நீலிமா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் குழந்தை பிறந்த தகவலை பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
நீலிமா நடத்திய போட்டோஷூட்:
மேலும், நீலிமா கர்ப்பமாக இருக்கும் போது இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமாக மேட்டர்னிட்டி போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். அந்த புகைப்படத்தில் நீலிமா தாமரை மேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். அந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கே பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. அதேபோல் நடிகை நீலிமா ராணி கோவிட் தடுப்பூசி கர்ப்பிணி பெண்கள் போடலாம் குறித்து வீடியோ ஒன்றையும் போட்டு இருந்தார்.