ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜய் சாரதி. ஊர் ஊராக சென்று அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன பாடல் பிடிக்கும் என்று பேட்டி எடுத்து டிவியில் போடுவார் விஜய் சாரதி.
அப்படி பேட்டி எடுக்க செல்லும் போது பேசிக்கொண்டே நேராக நடக்காமல் பின்னால் நடந்து செல்வார். பலருக்கும் இந்த ஷோ ஒரு பேவர்ட் ஷோ’வாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சாரதி ஒரு படித்து முடித்த பட்டதாரி ஆவார்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக சன் டிவியில் ஒரு ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார். அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி கண்டுள்ளார் விஜய் சாரதி.
கடந்த சில ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் விஜயசாரதி இலங்கையில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் இணைந்துள்ளாராம். விரைவில் தமிழுக்கும் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.