விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். நீயா நானா நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் வாமனன், டோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் கூட நடித்துள்ளார்.
கோபிநாத் கடந்த 2010 துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் கோபிநாத்திற்கு வெண்பா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. மேலும்,வெண்பா கிட்டார் கலையும் கற்று வருகிறார். இந்த நிலையில் வெண்பா, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்னே பாடலை வாசித்த வீடியோவை கோபிநாத் பகிர்ந்துள்ளார்.