விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் வாரா வாரம் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான மற்றும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் துவங்கி சர்வதேச பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் விவாத நடுவராக கோபிநாத் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்த பிரபல தான் இவருக்கு நீயா நானா கோபி என்ற பெயரும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பல்வேறு தலைப்புகள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ஜாதி பெருமை பேசும் கிராமத்து இளைஞர்கள் மற்றும் அதை எதிர்க்கும் படித்தனர் என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. ந்த நிகழ்ச்சியில் தங்களது ஜாதியை உயர்வாகவும் மேலும் தங்களது ஜாதியை அடையாளப்படுத்திக் கொள்வது பெருமையாகவும் ஒரு தரப்பினர் பேசி இருந்தார்கள்.
அதேபோல கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ஒரு குறிப்பிட்ட நபர்கள் அவர்கள் மனதில் ஜாதி என்பதை விதைத்து அவர்களை ஒரு பகடைக்காய் போல பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பேசிய ஒரு பெண்மணி தான் அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பேசப்பட்டிருந்தார். மேலும், சாதி பெருமை பேசிய ஒருவர் தங்கள் ஜாதியில் பிறந்தவர்கள் நடந்துவந்தாள் ராஜநடை போல இருக்கும் என்று சொன்னதும் அவரை கோபிநாத் எழுந்து நடக்கச் சொன்னார் அந்த நபர் சமூக வலைதளத்தில் கூட மிகவும் கேள்விக்கு உள்ளாகி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இந்த எபிசோடில் ஜாதி வேண்டாம் என்ற பக்கத்தில் பேசிய நபர்கள் ஒரு சிலர் நீயா நானா நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் என்றும், எந்த பக்கம் சாதகமா இருக்க வேண்டுமோ அந்த பக்கம் இவர்களை நீயா நானா குழுவினர் பயன்படுத்திகொள்வார்கள் என்றும் நெட்டிசன்கள் பல்வேறு ஆதாரங்களையும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பார்த்த பலரும் நீயா நானா நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதே போல நீயா நானா நிகழ்ச்சி ஒரு Scripted நிகழ்ச்சி என்றும் கமன்ட் செய்து வருவதோடு பலரும் கேலியான கமன்ட்களை செய்து வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் வாசி, இவனுங்க 10 பேர் வைத்து இருக்கானுங்க தசாவதாரம் கமல்.மாதிரி மேக்கப் போட்டு.மாத்திட்டே இருப்பானுங்க நான் கண்கூடா பார்த்தேன். காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை உக்கார வைக்கிறானுங்க ஆனா இவனுங்க கூட்டிட்டு வந்த ஆளு மட்டும் தான் பேச விடுவாங்க நடுவில் 2 பேர் பொது மக்கள் பேசலாம் என்று கமன்ட் செய்துள்ளார்.
அதே போல நீயா நானாவின் இந்த குறிப்பிட்ட எபிசோடில் பேசிய அந்த பெண்ணை பலரும் கேலி செய்து கமன்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் வாசி, அந்த பெண் பேசிய பாணியில் கமன்ட் செய்து ‘டேய் தம்பி சொன்னா கேளுடா! நான் 5000₹ குடுத்தா என்னா வேணாலும் பேசுவேன்! திருந்துங்கடா செல்லம்!அப்போ இவ்வளவு நாளா ஒரே ஆள வச்சு தான் பேசிட்டு இருக்கீங்க’ என்று பதிவிட்டதோடு நீயா நானா கோபிந்தையும் டேக் செய்து இருக்கிறார்.