பெண்கள் இடையே நடக்கும் காரசாரமான வாக்குவாதம்- இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியின் டாப்பிக் என்ன தெரியுமா?

0
222
- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சியில் பெண்களுக்கு இடையேயான வாக்குவாதம் குறித்த புரோமோ தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘நீயா நானா’ நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத்.

-விளம்பரம்-

ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், காதல், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் தரப்பிலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். வாரம் வாரம் ஒரு தலைப்பை வைத்து காரசாரமாக விவாதம் நடத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ப்ரோமோ வீடியோ:

அதாவது, படித்து பட்டம் வாங்கிய பெண்கள் ஹவுஸ் வைஃப் ஆக மட்டும் இருக்க விரும்புபவர்கள் ஒரு பக்கம், அதை எதிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம் என்று இந்த வாரம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்கிறது . படிப்பு என்பது அறிவை வளர்ப்பதற்கு தானே தவிர சம்பாதிக்க இல்லை என்று சொல்கிறார்கள். அதன் பின், நான் படித்த டிகிரியை வைத்து வீட்டுக்குள்ளே இருக்கணும் என்றால் நான் படிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று இன்னொரு பக்கம் சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

பெண்கள் வாக்குவாதம்:

அதற்கு எதிர் தரப்பினர் படிப்பு என்பது சம்பாதிக்க மட்டும் இல்லை அறிவு வளர்ப்பதற்கு என்று சொல்ல, படித்தாலும் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று இரு தரப்பு பெண்கள் மத்தியில் காரசாரமாக விவாதம் நடக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த நிகழிச்சியை பார்க்கரசிகர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement