விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பை எடுத்து கொண்டு இரு தரப்பினர் எதிரெதிரே அமர்ந்து காரசாரமாக விவாதம் செய்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் vs குழந்தைகள் தலைப்பு சென்றது.

அதில் சிறுமி சாஸ்விகா, தன்னுடைய அண்ணனுக்கு தான் எல்லாமே தன்னுடைய பெற்றோர்கள் செய்கிறார்கள். எனக்கு எதையுமே செய்ய வில்லை என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இதை பார்த்து பலருமே சாஸ்விகாவின் அம்மா பெண் குழந்தை என்பதால் தான் ரொம்ப பாலின பேதத்துடன் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் விமர்சித்து ட்ரோல் செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சிறுமி சாஸ்விகாவின் அம்மா பிரவீனா வெங்கட்ரவி அளித்த பேட்டியில், நாங்கள் சென்னையில் குடி இருக்கிறோம்.
நீயா நானா நிகழ்ச்சி:
நகரத்திலிருந்து பாலின பாகுபாடு பார்ப்பாங்களா? என்னுடைய மகளிடம் நாங்கள் எந்த பாலின பேதமும் பார்க்கவில்லை. எனக்கு முதலில் பிறந்தது பையன். பெண் குழந்தை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெற்றுக் கொண்டேன். எனக்கு என்னுடைய பொண்ணு தான் உயிர். எனக்கு பெண் குழந்தை இருக்கு என்பதனால் தான் ஃபேஷன் டிசைனிங் படித்து முடித்தேன். பொங்கல், தீபாவளி மட்டும் இல்லை அவளுடைய பிறந்தநாளுக்கு கூட ஆசையாக நான் தான் புது டிரஸ் டிசைன் பண்ணி தைத்துக் கொடுப்பேன்.
சிறுமி சாஸ்விகா அம்மா பேட்டி:
இன்னும் சொல்லப்போனால் என்னுடைய பொண்ணுக்காக தான் ஏதாவது சேர்த்து வைக்கணும் என்று டியூசன் எல்லாம் எடுக்கிறேன். என்னுடைய பையன் யஸ்வந்த் 11 வது படிக்கிறான். அவனை கராத்தே கிளாஸ் அனுப்புகிறேன். ஆனால், என் பொன்னும் கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று கிளாஸில் சேர்த்து விட்டேன். ட்ராயிங், போர்ட்ஸ் எல்லாத்தையும் கலந்து கொண்டு பரிசு வாங்கிட்டு வருகிறாள். நான் பாலின பாகுபாடு பார்க்கும் அம்மா இருந்திருந்தால் பையனை மட்டும் தான் கராத்தே கிளாஸ் அனுப்பி இருப்பேன்.

பாலின பாகுபாடு பற்றி சொன்னது:
ஏன் பொன்னையும் சேர்க்கணும்? அப்படி இருந்தால் அவள் படிக்கிற ஸ்கூலிலேயே அவளை ஏன் சேர்க்கணும்? இதை புரிந்து கொள்ளாமல் என்னை விமர்சித்து வருகிறார்கள். நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னாடி மரியாதையாக பேசணும், யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது என்று மட்டும் தான் அவளிடம் சொன்னோம். வேறு எந்த கண்டிஷனும் போடவில்லை. ஆனால், அவள் ஸ்டேஜ் பயம் இல்லாமல் போல்டாக பேசினாள். என் பொண்ணு பேசுவதை ரசித்து கொண்டிருந்தேன். தாத்தா, பாட்டி, அத்தை எல்லோருமே அவள் பேச்சை பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
https://www.youtube.com/shorts/-ZiYsMxo04o
சர்ச்சைகளுக்கு பதிலடி:
அக்கம் பக்கத்தில் எல்லாம் பொண்ணை நல்லா தைரியமாக வளர்த்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார்கள். இதையெல்லாம் தாண்டி பையனுக்கு நிறைய வாங்கிக் கொடுக்கணும். இவளுக்கு கம்மியா வாங்கி கொடுக்கணும் என்பதெல்லாம் எண்ணம் கிடையாது. சில சாப்பாடு அவன் விரும்பி சாப்பிடுவான். சில சாப்பாடு அவள் விரும்பி சாப்பிடுவாள். இன்னும் சொல்லப்போனால் இவளுக்கு தான் அதிகமாக வாங்கி தருவேன். பையன் என்னிடம் சண்டை போடுவான். அன்னைக்கு அவன் நீயா நானாவில் இருந்திருந்தால் அந்த உண்மையும் வெளிவந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்.






