நெஞ்சினிலே பட நடிகையா இது.! அவருக்கு இவ்வளவு பெரிய மகள் வேற இருக்காங்களா.!

0
2413
Isha
- Advertisement -

தமிழில் 1998-ஆம் ஆண்டு வெளியான பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதினை பெற்றார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அரவிந்த்சாமி உடன் எ’ன் சுவாசக்காற்றே’ படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சினிலே ‘படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

தமிழில் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்தியில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தி திரையுலகில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு டிம்மி நரங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கிழித்து இவருக்கு ரைனா என்ற பெண் குழந்தயும் பிறந்தது.

தற்போதும் நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை “இன்று நேற்றுநாளை. படத்தை இயக்கிய ராம் குமார் எடுக்கவிருக்கிறார். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.

-விளம்பரம்-
Advertisement