அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட நெல்சனின் மகன், நெல்சனின் மனைவி பதிவிட்ட வீடியோ படு வைரல்.

0
246
Nelson
- Advertisement -

கோலிவுட்டில் டாப் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிசில் இடம்பெறும். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார்.

- Advertisement -

அரபிக்குத்து பாடல் :

மேலும், பீஸ்ட் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் இதுவரையில் 45 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே அதிக லைக்ஸ்குகளை குவித்து சாதனைப் படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு விஜய் போல் நடனமாடி ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

நெல்சன் திலீப் குமாரின் மகன் ஆத்விக் நடனம் வீடியோ:

அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மகன் ஆத்விக் அரபிக் பாடலுக்கு விஜய் போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் வருங்கால ஹீரோ ரெடியா? என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

நெல்சனின் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்
இவர் விஜய் டிவியின் ஒல்லி பெல்லி, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர், ஒன் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பல்வேறு பணியாற்றி வந்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.

நெல்சன் இயக்கும் படம்:

ஆனால், அதற்கு முன்பாவே இவர் சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் பாதியிலேயே கைவிடபட்டு இருந்தது. பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘தலைவர் 169’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் தான் இசை அமைக்கிறார்.

Advertisement