நல்ல விமர்சனங்களை பெற்று வரும் விக்ரம் – லோகேஷ் போட்டு பொளக்கும் நெட்டிசன்கள். வைரலாகும் memesகளின் தொகுப்பு (இதான் காரணமா ? )

0
755
vikram
- Advertisement -

இன்று வெளியாகி இருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின் ரிலீசாகி இருக்கும் கமலின் விக்ரம் படத்தின் முன்னோட்டம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் இன்று வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை :

நான்கு ஆண்டுகளுக்கு பின் கமலஹாசன் படம் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரையரங்கில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன் மகனை கொலை செய்த கும்பலை பழிவாங்குகிறார் கமல். பின் போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க கமல் களமிறங்குகிறார். இது தான் படத்தின் ஒரு வரி கதை.

இது முழுக்க முழுக்க ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். கமல் தன்னுடைய மகனை படும் சிரமங்கள் உடன், பாசத்துடன் வளர்கிறார்.ஆனால், போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். தந்தையாக களத்தில் கமல் இறங்கி துவம்சம் செய்கிறார். இது தான் இந்த படத்தின் ஒன் லைன்.

-விளம்பரம்-

நெல்சனை பொளக்கும் நெட்டிசன்கள் :

லோகேஷ் கனகராஜின் முந்தய படங்களான மாஸ்டர், கைதி போன்று இந்த படமும் ஒரு ஆக்ஷன் விருந்தாக அமைந்து இருக்கிறது. மேலும், பலரும் எதிர்பார்த்தது போலவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.

வைரலாகும் மீம்ஸ் :

விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான்.

நெல்சனை கலாய்க்க காரணம் :

எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறார் லோகேஷ். இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். அதே போல பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பாக நெல்சன் அளித்த பேட்டிகளில் அவர் பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இந்த கேலிகளுக்கு மற்றுமொரு முக்கிய காரணம்.

அதிலும் குறிப்பாக ஒரு பேட்டியில் நல்ல படம் எடுத்து என்ன பண்ண போகிறோம். எல்லாரும் படம் எடுப்பது அது நன்றாக வசூலிக்கும் பணம் சம்பாதிக்கும் என்று தான் என்று பேசி இருந்தார். ஆனால், விக்ரம் படத்திற்கு முன் பல பேட்டிகளில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாமல், மிகவும் தன்மையுடன் தனது படைப்பை பற்றியும் அதில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றியும் தான் பேசி இருந்தார்.

Advertisement