பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து ‘கூர்கா 2, Money Heist’ போன்ற ஹாஸ்டேக்குகள் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிவந்த நிலையில் பீஸ்ட் படத்தின் காபி சர்ச்சைகளுக்கு இயக்குனர் நெல்சன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

Advertisement

காபி சர்ச்சையில் சிக்கிய பீஸ்ட் :

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில், செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மாலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள்.இவர்களை விஜய் காப்பாற்றுவது போல் மூன்று நிமிட வீடியோவை காண்பித்திருக்கிறார்கள். தற்போது இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஹாலிவுட் படம் Die hard, கூர்கா 2, Money Heist போன்ற படங்களின் பாணியில் இருப்பதாக விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை.

அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், ட்ரைலர் மூலம் பீஸ்ட் படத்தின் கதை இதுதானா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. மேலும், இந்த ட்ரைலர் வெளியான போதே MoneyHeist, Gurkha2 போன்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ள நெல்சன், ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை.

Advertisement

நானும் கூர்கா படத்தை பார்த்தேன்

பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும். இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது. நானும் கூர்கா படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.பொதுவாக என்னுடைய டிரைலர்கள் ஒரு மாதிரியாகவும், படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

Advertisement

அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது

டிரைலரில் வரும் காட்சிகளை வைத்து படத்தை தீர்மானிக்க முடியாது. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. படம் பார்க்கும்போது அதனை உணர்வார்கள்.விஜய் என்னை அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறிய பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது. ஆனாலும் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். என்றும் கூறியுள்ளார் நெல்சன்.

Advertisement