100ரூ பிரியாணியை தான் விஜய் சாப்பிடுவார், நெல்சன் அளித்த பேட்டி – மீம்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்கள்.

0
343
Vijay
- Advertisement -

விஜய்யின் 100 ரூபாய் பிரியாணி குறித்து நெல்சன் அளித்த உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். விஷுவல் கம்யூனிகேஷன் என்ற இளங்கலை பட்டம் முடித்தவர். இவர் கம்யூனிகேஷன் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் சின்னத்திரையில் தயாரிப்புக் குழுவில் ஒருவராகவும் பணி ஆற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி சின்னத்திரையில் நெல்சன் கொடிகட்டிப் பறந்தாலும் வெள்ளித்திரையில் இவரால் தடம் பதிக்க முடியவில்லை. இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்றது. இதனால் மனம் உடைந்து சிலகாலம் நெல்சன் படம் இயக்காமல் இருந்தார். பின் 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். அனிருத் மூலமாகத் தான் இவருக்கு கோலமாவு கோகிலா படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

நெல்சனின் டாக்டர் படம்:

காமெடி, கமர்ஷியல் பாணியில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. பிறகு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. டாக்டர் படம் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என சீரியசான பிரச்சினைகளை கொண்டிருந்தாலும் இதற்கிடையில் காமெடி கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. அதுவும் கொரோனா காலத்தில் இந்த மாதிரியான சீரியஸ் கலந்த காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது.

நெல்சனின் பீஸ்ட் படம்:

இதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் அவர்கள் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

மேலும், விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து கூறியிருப்பது, விஜய் சாரோட ஒரு ஷாப்பிங் போனா கூட ரொம்பவே சிம்பிளாக தான் வாங்குவார்.

பேட்டியில் விஜய் குறித்து நெல்சன் சொன்னது:

100 ரூபாய் ப்ரியாணியாக இருந்தால் கூட அதையும் சந்தோசமாக சாப்பிடுவார். அப்படி ஒரு சிம்பிள் லைப் ஸ்டைல் அவரோடது. அப்படி ஒரு நாள் ராத்திரி அவரோடு சாப்பிட உட்கார்ந்ததும் விஜய் சார் சாதாரணமான பிரியாணி சாப்பிட்டு இருந்தார். இதை வெளியே நானே சாப்பிட்டு வந்து இருப்பேன் என்று அவர்கிட்ட சொன்னேன். அதற்கு அவர் இவ்வளவு தான் லைப்ன்னு சிரிச்சுட்டே சொன்னார் என்று நெல்சன் கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது விஜய்யின் 100 ரூபாய் பிரியாணி மீம்ஸ் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement