நெல்சனை மட்டுமே நம்ப முடியாது, அவரையும் படத்துல சேர்த்துகோங்க – தலைவர் 169ல் பிரபல இயக்குனரை இணைத்துக்கொண்ட ரஜினி. யார் தெரியுமா ?

0
243
thalivar169
- Advertisement -

தலைவர் 169 படத்தின் கதையை பலப்படுத்த நெல்சன் உடன் இணையும் முன்னணி இயக்குனர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தளராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின் இவர் சின்னத்திரையில் தயாரிப்புக் குழுவில் ஒருவராகவும் பணி ஆற்றியிருக்கிறார். பிறகு இவர் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
Nelson Old Directional Show | நெல்சன் இயக்கிய நிகழ்ச்சி

ஆனால், சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்றது. மேலும், 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். காமெடி கமர்ஷியல் பாணியில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

- Advertisement -

பீஸ்ட் படம்:

டாக்டர் படத்தில் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என சீரியசான பிரச்சினைகளை கொண்டிருந்தாலும் இதற்கிடையில் காமெடி கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து இருக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

Rajinikanth And Nelson In Thalaivar-169 Story Leaked| நெல்சன்

அண்ணாத்த படம்:

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படம் ‘தலைவர் 169’. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

-விளம்பரம்-
Rajinikanth And Nelson In Thalaivar-169 Story Leaked| நெல்சன்

தலைவர் 169 படம்:

இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் அனேகமாக நீலாம்பரி கதாபாத்திரம் போல் நெகட்டிவ் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ரஜினி நெல்சன் கூட்டணியில் படம் நடக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

நான் சொல்வதைக் கேட்டு நடிக்கும் ஒரே நடிகர் இவர்தான் ! கே எஸ் ரவிக்குமார்  புகழாரம் - Tamil Behind Talkies

தலைவர் 169 படத்தில் இணையும் பிரபலம்:

அதற்கு நெல்சன் கண்டிப்பாக படம் உருவாகும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நெல்சன் உடன் முன்னணி இயக்குனர் இந்த படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் கதையை பலப்படுத்த நெல்சன் உடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இணைய உள்ளார் என கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் நடிக்கிறாரா? இல்லை இயக்குனராக பணி புரிகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement