வாய்ப்பு கேட்ட விக்னேஷ் சிவன்.! நீ நாட்டிலேயே இருப்பது இல்லை என்று கலாய்த்த இயக்குனர்.!

0
4158
Vignesh-Shivan
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.  

-விளம்பரம்-

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீ ஊர் சுற்றத்தான் லாயக்கு என்று விக்னேஷ் சிவனை சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குனர் நெல்சன்.

- Advertisement -

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிவர் இயக்குனர் நெல்சன். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் ஆவர். கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் இயக்கப்போகும் புதிய படத்திற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாகவும் அதற்காக உங்கள் புகைப்படங்களை மெயில் செய்யமாறும் பதிவிட்டிருந்தார் நெல்சன். இந்த டீவீட்டிற்கு பதில் அளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

-விளம்பரம்-

அதில், நான் ஏற்கனவே மெயில் செய்து விட்டேன், பதிலே இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். விக்னேஷ் சிவனுக்கு பதிலளித்த நெல்சன், ஷூட்டிங் அப்போ நீ எந்த நாட்ல இருப்பானே தெரியாதே டா என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் அடிக்கடி வெளிநாட்டிற்கு ஊர் சுற்ற சென்றுவிடுவதை தான் நெல்சன் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement