நிகழ்ச்சியில் ஒரே பெண்ணை சைட் அடித்த நெல்சன்-யுவன், வைரலாகும் வீடியோ -மீம்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்கள்

0
524
nelson
- Advertisement -

நெல்சன், யுவன் இருவரும் ஒரு பொண்ணை சைட் அடிக்கிற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி இருந்தார். பின் நெல்சன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி இருந்தார். அதற்கு பின் இவர் முதன்முதலாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தது.

-விளம்பரம்-
Nelson Old Directional Show | நெல்சன் இயக்கிய நிகழ்ச்சி

இந்த திரைப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டு படப்பிடிப்புகள் கூட நடைபெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

- Advertisement -

பீஸ்ட் படம்:

இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் கடுப்பில் நெல்சனை திட்டி இருந்தார்கள்.

Nelson Dilip Kumar Interview Beast Movie | பீஸ்ட் நெல்சன்

‘தலைவர் 169’ படம்:

தற்போது நெல்சன் அவர்கள் ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். அதற்கான அறிவிப்பு எல்லாம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியி ல் உருவாகும் இந்த படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

behindwoods நிகழ்ச்சியில் நெல்சன்:

மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நெல்சன் ஒரு பெண்ணை சைட் அடித்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் behindwoods நிறுவனத்தின் கோல்ட் மெடல் விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது. அப்போது இந்த நிகழ்வில் நெல்சன், யுவன் உட்பட பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

நெல்சன்- யுவன் சைட் அடித்த வீடியோ:

நிகழ்ச்சியில் நெல்சன்- யுவன் இருவரும் பயங்கரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் ரொம்ப சீரியசாக பேசிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு பெண் கிராஸ் செய்கிறார். அந்தப் பெண்ணை பேசிட்டு இருந்த இருவருமே ஒரு நொடி பார்த்து இருக்கிறார்கள். இதை நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கிட்ட மாட்டிகிட்டது. இந்த வீடியோவை தான் தற்போது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு யுவன் மற்றும் நெல்சனை கிண்டல், கேலி செய்து வருகிறார்கள்.

Advertisement