நெஞ்சம் மறப்பதில்லை படம் புரியலயா – இந்த ட்விட்டர் பதிவை பாருங்க கண்டிப்பா புரியும். வைரலாகும் Decoding பதிவு.

0
3702
nenjam
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா போன்றவர்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தின் எஸ் ஜே சூர்யா, ராமசாமி (ராம்சே) என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார் மரியம் (ரெஜினா கசான்ட்ரா) கடவுள் பக்தி அதிகம் உள்ளவராக இருக்கும் ரெஜினா தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக செலவு செய்கிறார். மற்றொரு புறம் படத்தின் நாயகன் ராம்சே  (எஸ் ஜே சூர்யா ) பணக்கார பெண்ணான ஸ்வேதாவை ( நந்திதா) திருமணம் செய்துகொள்கிறார். இந்த தம்பதியருக்கு 4 வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.

அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள கேர் டேக்கராக மரியமை (ரெஜினா கசான்ட்ரா) அணுகுகிறார் ராம்சே  (எஸ் ஜே சூர்யா ) தங்களது குழந்தையை பார்த்துக்கொள்ள பெரும் பணம் தருவதாக கூறியதால் அந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறார் மரியம் (ரெஜினா கசான்ட்ரா). இதனிடையே சபல குணம் படைத்த நாயகன் ராம்சேவிற்கு (எஸ் ஜே சூர்யா ) மரியம் (ரெஜினா கசான்ட்ரா) மீது ஆசை வருகிறது.

- Advertisement -

மரியம்மை அடைய வேண்டும் எனராம்சே மரியமிடம் சில்மிஷம் செய்ய முயற்சிக்கும்போது மரியம் விலகிச் செல்கிறார். இந்த போக்கின் உச்சகட்டத்தில் ராம்சே மரியம்மை கொலைசெய்து விடுகிறார். தன்னை கொலை செய்த ராம்சேவை பழிவாங்க மரியம் ஆவியாக வருகிறார். மரியம் ஆவியாக வந்து ராம்சேவை பழி வாங்குகிறாரா? இல்லையா? என்பதை தன்னுடைய வித்யாசமான திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார் செல்வராகவன்.

இந்த படத்தில் ரெஜினா தெய்வத்தை போலவும் எஸ் ஜே சூர்யா சாத்தான் போலவும் உருவாகப்படுத்தி இருப்பார் செல்வராகவன். ஆனால், இந்த படம் பலருக்கும் புரியவில்லை என்று கருத்துக்கள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தினை ட்விட்டரில் ரசிகர் ஒருவர் மிகவும் ஆழமாக Decoding செய்துள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement