சிங்கள்ஸ் நாங்க பாவம் – கணவரின் டீ-சர்ட்டுக்குள் புகுந்து கொண்டு ரொமான்ஸ் போஸ் கொடுத்த சீரியல் நடிகை.

0
3436
saranya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் ராஜா ராணி, அரண்மனை கிளி, சின்னத்தம்பி, நெஞ்சம் மறப்பதில்லை என்று சினிமா பட பாணியில் பெயர்களை வைத்து ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த வரிசையில் ஆயுத எழுத்து என்ற படத்தின் தலைப்பில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சரண்யா.

-விளம்பரம்-

நடிகை சரண்யா ஒன்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு புதிதானது அல்ல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யா ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடர் 358 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

- Advertisement -

ஆரம்பத்தில் கலைஞர் செய்திகளுக்கு செய்தி நிருபராக இருந்து வந்த இவர். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால் அந்த தொலைக்காட்சியிலும் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் .பின்னர் ஜீ தமிழ் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்துள்ளார் நடிகை சரண்யா.

இப்படி சீரியல்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் சரண்யா அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் போஸ்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை புகைய வைத்து வருகிறார். அந்த வகையில் ணவரின் டீசர்டுக்குள் புகுந்து கொண்டு முத்தம் கொடுக்கும் படு ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிங்கிள்ஸ்களை புலம்ப வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement