விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் ராஜா ராணி, அரண்மனை கிளி, சின்னத்தம்பி, நெஞ்சம் மறப்பதில்லை என்று சினிமா பட பாணியில் பெயர்களை வைத்து ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த வரிசையில் ஆயுத எழுத்து என்ற படத்தின் தலைப்பில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சரண்யா.
நடிகை சரண்யா ஒன்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு புதிதானது அல்ல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யா ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடர் 358 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
ஆரம்பத்தில் கலைஞர் செய்திகளுக்கு செய்தி நிருபராக இருந்து வந்த இவர். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால் அந்த தொலைக்காட்சியிலும் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் .பின்னர் ஜீ தமிழ் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்துள்ளார் நடிகை சரண்யா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும், சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சமீபத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சாயா சிங் கமிட் ஆகியுள்ளார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.