படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.! மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட புகைப்படம்.!

0
7787
saranya

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரும் ஒன்று.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீரியலில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யா திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது சன் தொலைக்காட்சியில் ரன் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இந்த வார தலைவர் பதவிக்கு வெற்றி பெறப்போவது யார்.! சரிக்கு சமமாக இருக்கும் போட்டியாளர்கள்.! 

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் இந்த தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சரண்யா திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த படக்குழுவினர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சரண்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கால நிலை மாற்றத்தால் தனக்கு வைரல் பீவர் வந்துள்ளதாகவும் அதனால் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன் என்றும் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.

Advertisement