சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார் .பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார். நடிகை சரண்யா அவர்கள் முதல் சீரியலிலேயே இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார்.

Advertisement

பின் சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சாயா சிங் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சரண்யா தன் காதல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். நடிகை சரண்யா அவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சரண்யாவின் கணவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார். சரண்யா தற்போது சீரியலில் பிசியாக நடித்து இருப்பதால் அவ்வப்போது தன்னுடைய காதல் கணவரை சந்தித்து வருவார். சமீபத்தில் கூட தன்னுடைய காதல் கணவருடன் காதலர் தினத்தை அசத்தலாக கொண்டாடி உள்ளார் நடிகை சரண்யா. நடிகை சரண்யா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

Advertisement

அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகை சரண்யா தன்னுடைய ட்விட்டரில் தன் காதல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை சரண்யா. இதை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் கொரோனா நேரத்தில் காதல் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

தற்போது நடிகை சரண்யா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக போய் கொண்டு இருக்கும் ஆயுத எழுந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் சப் கலெக்டர் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சரண்யா. இந்த தொடரின் மூலம் இவர் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் படையை சேர்த்து உள்ளார்.

Advertisement