சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் எப்போதுமே அமைதியான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீ துர்கா. அதோடு இவர் இளமை ததும்பும் முக பாவம் உடையவர். இவர் சீரியலில் அமைதியாக வந்து போகும் கதாபாத்திரங்களிலும், அழுகை கதாபாத்திரங்களில் மட்டும் தான் அதிகம் நடித்து உள்ளார். மேலும், சிறுவயதிலிருந்தே இவர் சினிமா, சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சில காலமாக மாடலிங் துறையில் கூட பணிபுரிந்து இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இவர் 10 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீ துர்கா அவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். மேலும், இவருடைய கணவர் பெயர் கௌதம். இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர் சன் டிவியில் மதியம் ஒளிபரப்பான உறவுகள், தியாகம் தொடர்களில் நடித்து உள்ளார். மேலும், முந்தானை முடிச்சு தொடர்களிலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று இவரே தயாரித்து வழங்கினார். இவர் இதுவரை நடித்த சீரியலில் எல்லா கேரக்டரும் அமைதியான, பொறுமையான கதாபாத்திரங்கள் தான். இதை தொடர்ந்து இவர் ஊஞ்சல், அலைகள், சிகரம் சீரியல்களில் நடித்து உள்ளார். அதிலும் குறிப்பாக இவர் ஊஞ்சல் சீரியலை பற்றி அடிக்கடி பேசுவார். ஏனென்றால் ஊஞ்சல் சீரியலில் தான் முதன் முதலாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதோடு அந்த சீரியலில் முதல் பாதியில் நெகடிவ் கேரக்டரும், இரண்டாம் பாதியில் தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாசிட்டிவான கேரக்டரிலும் நடித்திருந்தார்.
மேலும், உறவுகள் சீரியலில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் யாரும் அந்த அளவுக்கு மறந்திருக்க மாட்டார்கள். ஏன்னா, எந்த சூழ்நிலையிலும் கோபமே வராத குணவதி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும்,அவருக்கு எப்போதுமே நகைச்சுவை கேரக்டர்கர் தான் ரொம்ப பிடிக்கும் என்று அடிக்கடி சொல்லுவார். ஏனென்றால் மற்றவர்களை ஜாலியாக வைத்திருப்பது அவருக்கு பிடிக்கும். மேலும், அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லை என பல நேரங்களில் கூறியுள்ளார். ஆனால், ஒரு முறை அவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘பொய் சொல்ல போறோம்’ என்ற தொடரில் கொஞ்ச நாட்கள் மட்டும் காமெடி செய்திருக்கும் கதையில் நடித்து இருந்தார்.
அது கொஞ்சம் நாட்கள் அந்த தொடரில் வந்தாலும் என்னால் மறக்க முடியாது என்று அடிக்கடி கூறுவார். இதை தொடர்ந்து இவர் சினிமா உலகில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்து இருந்தார். இவருக்கு நடிப்பை தவிர சங்கீதத்தில் அதிக ஆர்வம் உண்டு. ஏனென்றால் இவர்களுடைய ஒட்டு மொத்த குடும்பமே சங்கீதக் குடும்பம் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இவர் முறையாக சங்கீதம் பயின்றவர்.
அதனால் இவர் சங்கீதத் துறையில் வர வேண்டும் என்று நினைப்பவர். அதுமட்டுமில்லாமல் சின்ன வயதில் இருந்தே இவருக்கு போட்டோகிராபி எடுப்பதில் அதிக ஆர்வம் உடையவர். மேலும், சினிமா துறையில் போட்டோகிராபி ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு உள்ளது. மேலும் ,வருங்காலத்தில் இசைப்பள்ளி ஒன்றை நடத்த வேண்டுமென்றும், அதில் படிக்க வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று தனது லட்சிய கனவை தெரிவித்திருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் ஹீரோவுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.