நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் முடிவுக்கு வர இருக்கும் காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ரேஷ்மா முரளிதரன். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின் தான் இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து இருந்தார் ரேஷ்மா.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடரின் மூலம் தான் ரேஷ்மா மக்கள் மத்தியில் பிரபலமானார் . இந்த சீரியலின் மூலம் மதன்-ரேஷ்மா இருவரும் காதலிக்க ஆரம்பித்து இருந்தார்கள். இதற்கு முன்னாடியே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் மதன் நடித்திருந்தார். இருந்தாலும், பூவே பூச்சூடவா சீரியலில் மூலம் தான் மதன் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் முடியும் நேரத்தில் இருவரும் காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.
ரேஷ்மா மற்றும் மதன்:
இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஷாக்கிங் ஏற்படுத்தி இருந்தது. மேலும், பூவே பூச்சூடவா சீரியல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் அபி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்திய கதை. இதனிடையே ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து இருந்தார்கள்.
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல்:
திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில்
ரேஷ்மா அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் ரீமேக் தான். தற்போது இந்த சீரியலில் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன், அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சீரியல் முடிய காரணம்:
இந்த சீரியல் கௌதம் மற்றும் மதுமிதா ஆகிய இருவரை சுற்றி நகர்கிறது. கௌதம் ஒரு தொழிலதிபர், அவர் அவரைவிட ஏறக்குறைய பத்து வயது குறைவான படித்த நடுத்தர வர்க்கப் பெண் மதுமிதாவை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தற்செயலாக காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்த சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்று வந்திருந்தது. இந்த சீரியல் தொடங்கி ஆறு மாதம் தான் ஆகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென இந்த சீரியலை முடித்து இருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆகாஷ் பதிவு:
இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சீரியல் குழுவினருக்குமே பேரதிர்ச்சி தான். மேலும், இந்த சீரியல் நிறுத்துவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, டிஆர்பி ரேட்டிங் குறைந்திருப்பதால் தான் சீரியல் முடிய இருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சீரியல் ஹீரோ ஆகாஷ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தனக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாகத்தான் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இதனால் தான் சீரியல் நிறுத்தப்பட இருப்பதாக கூறியிருக்கிறார்.