'நெஞ்சத்தை கிள்ளாதே' சீரியல் முடிவடைந்தது குறித்து ஜெய் ஆகாஷ் ரசிகர்களை குறிப்பிட்டு நாயகி ரேஷ்மா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ரேஷ்மா முரளிதரன். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின் தான் இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'பூவே பூச்சூடவா' சீரியலில் நடித்து இருந்தார்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடரின் மூலம் தான் ரேஷ்மா மக்கள் மத்தியில் பிரபலமானார் . இந்த சீரியலின் மூலம் மதன்-ரேஷ்மா இருவரும் காதலிக்க ஆரம்பித்து இருந்தார்கள். இதற்கு முன்னாடியே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் மதன் நடித்திருந்தார். இருந்தாலும், பூவே பூச்சூடவா சீரியலில் மூலம் தான் மதன் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் முடியும் நேரத்தில் இருவரும் காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.
ரேஷ்மா மற்றும் மதன்:
'பூவே பூச்சூடவா' சீரியல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் அபி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்திய கதை. இதனிடையே ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் தங்கள் கரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரேஷ்மா அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ சீரியலில் நடித்து இருந்தார்.
View this post on Instagram
நெஞ்சத்தை கிள்ளாதே:
இந்த சீரியல் ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான 'உள்ளம் கொள்ளை போகுதடா' சீரியலின் ரீமேக் தான். இந்த சீரியலில் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன், அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த சீரியல் தொடங்கி ஆறு மாதம் கூட ஆகாத நிலையில் திடீரென இந்த சீரியலை சமீபத்தில் முடித்திருந்தாரர்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சீரியல் குழுவினருக்குமே பேரதிர்ச்சி தான்.
சீரியல் முடிவுக்கு வந்தது:
சமீபத்தில் இது தொடர்பாக சீரியல் ஹீரோ ஆகாஷ் பதிவு ஒன்று போட்டுஇருந்தார். அதில் அவர், தனக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதன் காரணமாகத்தான் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இதனால் தான் சீரியல் நிறுத்தப்பட இருப்பதாக கூறி இருந்தார். ஆனால், ஒரு சிலர் இந்த சீரியல் முடிவடைவதற்கு கதாநாயகி ரேஷ்மா தான் காரணம் என்று கமெண்ட்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ரேஷ்மா, ஜெய் ஆகாஷின் ரசிகர்களுக்காக ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில், உண்மை என்ன என்று தெரியாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அதேபோல் யாரையும் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்யாதீர்கள்.
View this post on Instagram
ரேஷ்மா பதிவு:
மேலும், நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததற்கு நானோ அல்லது என்னுடைய டீமோ காரணம் கிடையாது. என்னுடைய பேன் பேஜ்களை ரிப்போர்ட் செய்வதன் மூலமாகவோ, அட்டாக் செய்வதன் மூலமாகவோ உண்மையை மறைக்க முடியாது. எனது ரசிகர்கள் அன்போடும் மரியாதையோடும் எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள். அதனால் அவர்களை யாராவது தாக்கி பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்கள் ஹீரோவை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால், தொழில் முறையை ஊக்குவிக்கவும், நச்சுத்தன்மையை அல்ல என்று பதிவிட்டு இருக்கிறார்.






