கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளது. தனது 20 வயதில் 2006ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இவருக்கு ஷாம் என்ற காதலர் இருக்கிறார். தற்போது 32 வயதானா பூனம் கவுருக்கும் ஷாமுக்கும் திருமணம் ஆகிவிட்டது என செய்திகள் வந்துள்ளது. ஆனால் இதுவரை ஷாமை பொது வெளியில் காட்டியதில்லை பூனம்.இவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை ஆவார். பவன் கல்யான் அரசியலில் குதிக்கப் போவதை மகேஷ் கத்தி என்னும் விமர்சகர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை பிடிக்காத பூனம்,
விபச்சாரம் செய்து சம்பாதிப்பதை விட, மற்றவரை விமர்சனம் செய்து சம்பாதிப்பது மிக கேவலமானது எனக் கூறினார்.இதன் காரணமாக கொதித்தெழுந்த அந்த விமர்சகர், பூனம் கவுர் மீது ஆதாரத்துடன் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.பல நிகழ்ச்சிகளில் பவன்க ல்யாணுடன் ஒன்றாக இருக்கிறீர்களே, உங்களுக்கும் திருமணம் ஆன பவனுக்கும் என்ன தொடர்பு?
பவன் கல்யாண் உங்களை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறுகிறீர்கள். அப்படி என்றால் எப்படி இன்னும் பவனுடன் இருக்கிறீர்கள். இது என்ன மாதிரியான காதல்?
இது போன்ற பல கேள்விகளை கேட்ட அந்த விமர்சகர், இதற்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இவரின் இந்த கேள்விகளுக்கு பூனம் கவுர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.




