பூனம் கவுர் 1986ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் பீப் சிங் மற்றும் அம்மாவின் பெயர் பஹ்ரெயின் கவுர். இவர் ஹைதராபாத் நகரில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்து அங்குள்ள தேசிய தொழிநுட்ப கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளது. தனது 20 வயதில் 2006ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
தற்போது தமிழில் ‘நண்டு என் நண்பன் ‘ படத்தில் நடித்து வருகிறார். இதுவரை படங்களில் கவர்ச்சி காட்டாத பூனம் கவுரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் நடந்து வரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.