அந்த பொண்ணு வாழ்க்கை நாசம், பணம் பத்தும் செய்யும்- விமர்சனங்களுக்கு நெப்போலியன் மகன் பதிலடி

0
420
- Advertisement -

தன் திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு நெப்போலியன் மகன் கொடுத்திருக்கும் பதிலடி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் அங்கே ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி இவர் இருப்பதற்கு காரணமே அவருடைய மகன் தனுஷ் தான். தனுஷிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்கிற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயன் இல்லாமல் போனது. பின் இவர் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோயை குணப்படுத்தி இருந்தார். இருந்தாலுமே, அந்த நோய் முழுவதுமாக குணமாகவில்லை. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு நெப்போலியன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார்.

- Advertisement -

தனுஷ் குறித்த தகவல்:

பின் தனுஷின் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கி விட்டார். தனுஷும் தன்னிடம் இருக்கும் குறைய மறந்து பலத்துறைகளில் சாதித்து இருக்கிறார். நெப்போலியன் நடத்திவரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார். தற்போது தனுஷிற்கு 25 வயது ஆனதால் நெப்போலியன் திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறார். சமீபத்தில் தான் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நெப்போலியன் மகன் திருமணம்:

மேலும், தனுஷின் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது. அதனால் தனுஷ் இந்தியா வரவில்லை. நெப்போலியன் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். அங்கு மூலக்கரை பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் தான் அக்ஷயா. தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும், தனுஷ் இந்தியாவுக்கு விமானத்தில் வர முடியாத காரணத்தாலும், கப்பலில் வந்தால் பல மாதத்திற்கு மேலாகும் என்பதாலும் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது.

-விளம்பரம்-

திருமணம் குறித்த தகவல்:

தனது மகன் திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து தனது குடும்பத்துடன் நெப்போலியன் ஜப்பான் சென்றுள்ளார். நெப்போலியன் மகன் திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் நடக்க இருப்பதால் திருமணத்திற்கான வேலைகளை செப்டம்பர் 1- ஆம்தேதியே தொடங்கி விட்டார்கள். விமானத்தில் பயணித்தால் தனுஷ் உயிர்க்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சொன்னதாலே தன் மகனுக்காக சொகுசு கப்பலை நெப்போலியன் ஏற்பாடு செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஜப்பானுக்கு போக வேண்டும் என்பது தனுஷ் உடைய எட்டு வருட கனவாம். அதை தற்போது நெப்போலியன் நிறைவேற்றி இருக்கிறார். இந்நிலையில், தனுஷின் திருமணத்தை பலரும் பல விதமாக விமர்சித்து இருந்தார்கள்.

நெப்போலியன் மகனின் பதிலடி:

தற்போது அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘எல்லோருக்கும் வணக்கம். எனது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. சில பேர் எனது திருமணம் பற்றி நெகட்டிவ் ஆக பேசி இருக்கிறார்கள். நெகட்டிவ் பேச்சுக்கள் என்னை பெரிதாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது எனக்கு மோட்டிவேஷன் ஆக தான் இருக்கிறது. அப்படி பேசியவர்களிடம் நான் ப்ரூஃப் செய்து வென்று காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். அதை ப்ரூஃப் பண்ணிவிட்டு உங்களிடம் வந்து பேசுகிறேன். என்னைப் போல இருக்கும் நிறைய பேரை அதை செய்ய முடியாது. இதை செய்ய முடியாது என்று சொல்வார்கள். விட்டுக் கொடுக்காமல் முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள் என்று தனுஷ் கூறியுள்ளார்.

Advertisement