இதற்காக தான் நான் அமெரிக்காவில் செட்டில் ஆனேன், உண்மையை உடைத்த நெப்போலியன்-வைரலாகும் வீடியோ

0
918
Nepolean
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவர் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

-விளம்பரம்-
நடிகர் நெப்போலியன் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! -  Tamil Behind Talkies

அதன் பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. இவர் இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். சில காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நெப்போலியன் குடும்பம் பற்றிய தகவல்:

அதோடு இவரது குடும்பம் தற்போது அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவரின் மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். ஏன்னா, அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி டேனியல் ஷீனா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

நடிகர் நெப்போலியன் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! -  Tamil Behind Talkies

நெப்போலியன் ஹாலிவுட் பயணம்:

இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார். நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கிறித்துமஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதையில் நெப்போலியன் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அடுத்த அடுத்த படத்திலும் நெப்போலியன் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது. பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அமெரிக்காவில் செட்டில் ஆன காரணம்:

இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் அமெரிக்காவில் செட்டிலானததற்கான காரணத்தை கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மட்டுமில்லை எல்லோர் பெற்றோர்களும் குழந்தைகளின் டீன்-ஏஜ் வயதில் கூட இருந்து கவனிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப தாயின் அரவணைப்பும், தந்தையின் வழிகாட்டுதலும் இருந்தால் ஒரு குழந்தை நல்வழியில் செல்லும். நான் என்னுடைய இரண்டு மகன்களும் 3 , 5 வயது என்று சிறுவயதாக இருக்கும்போது ஓடி ஓடி உழைத்துக் கொண்டு இருந்தேன்.

வைரலாகும் நெப்போலியன் வீடியோ:

ஆனால், டீன் ஏஜ் வயது வந்தவுடன் அவர்களை கவனிக்கும் பொறுப்பு எனக்கு அதிகமாகி விட்டது. நான் மட்டுமில்லை என்னை போன்று எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் டீன் ஏஜ் வயதில் சரியான முறையில் வழிநடத்த வேண்டும். அதுவும் என்னை மாதிரி சூழ்நிலை உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பாத்து கொள்ள வேண்டும். அதனால் தான் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி நெப்போலியன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் நெப்போலியனை பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement