நிறைய நிறைய நிறைய.! வெளியானது ‘நேர்கொண்ட பார்வை ‘ படத்தின் ட்ரைலர்.!

0
549
Nerkonda-Paarvai

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேர்கொண்ட படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is D81y-x3VUAIt6bv.jpg

மேலும், இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நாம் பலரும் அறிந்த ஒரு விடயம் தான். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பின் வேறு எந்த அப்டேடும் வெளியாகவில்லை. படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் படத்தின் ட்ரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று (ஜூன் 12 )தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ரசிகர்கள் சற்றும் எதிர்பாரத இந்த அப்டேட்டாள் அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் ஆழ்ந்தனர். மேலும் #Nerkondapaarvaitrailer என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது இந்த ட்ரைலரும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement