நாளை ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பும் அஜித்.! எதிற்காக தெரியுமா.!

0
344
Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை ,தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறா.ர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

-விளம்பரம்-

இந்தப் படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான படத்தின்’பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வினோத் குமார் முதலில் தனது சொந்த கதையில் தான் இந்த படத்தை எடுப்பதாக இருந்தார். ஆனால்,பிங்க் படத்தின் ரீமேக்கை வாங்கியதால் போனி கபூர் இந்த படத்தை எடுக்குமாறு வினோத்குமாரும் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கும் வினோத் குமார் இயக்குனராக கமிட் செய்வதாக போனி கபூர் உறுதியளித்துள்ளா.ர் இந்த படம் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்த படத்திற்கு பல்வேறு புரமோஷன் வேலை செய்து வருகிறார் போனி கபூர்.

தற்போது இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளது. மேலும், நாளை நடிகர் அஜித் மறைந்த நடிகர் மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement