தீ முகம் தான்.!யுவனின் வெறித்தனமா தீம் பாடல்.! ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

0
1481
Nerkonda Parvai
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தற்போதும் யூடுயூப்பில் பட்டையைகிளப்பி வருகிறது.

-விளம்பரம்-

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் அவரை காண முடியவில்லை.

இதையும் பாருங்க : சாக்க்ஷி ஒரு மாதிரி பாக்குறாங்க.! கமலின் குசும்பை பாருங்க.!

- Advertisement -

இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகி சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் தீம் பாடல் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தீம் மியூசிக் பாடல் வெளியாகியுள்ளது. தீ முகம் தான் என்று துவங்கும் இந்த தீம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பில்லா, மங்காத்தா படங்களுக்கு பின்னர் யுவனின் தீமில் அஜித்தை காண ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement