இத்தனை கோடியை திருப்பித்தருமாறு நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் ?

0
504
nayanthara
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தில் நடித்தார். அப்போது முதல் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதனை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள், பிறந்த நாள், பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடும் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

-விளம்பரம்-

நயன்தாரா விக்கினேஷ் சிவன் திருமணம் :-

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்யபோவதாக அறிவித்திருத்தனர். இவர்கள் திருமணம் எப்பொழுது என்று திரையுலகினரும், ரசிகர்களும் வெயிட்டிங்கிள் வெறியானர்கள். இந்நிலையில் இவர்கள் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜூன் 9 வியாழக்கிழமையன்று காலை நடைபெற்றது. இருவரின் தரப்பிலிருந்தும் திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண விருந்தின் மெனுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ட்விட்டரில் அவர்களுடைய திருமணம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்டாகி வந்தது.

- Advertisement -

ஓடிடி தளத்திற்கு திருமண நிகழ்ச்சியை விற்றுவிட்டனர் :-

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஓடிடி தளத்திற்கு தங்களது திருமணம் நிகழ்ச்சியை பெரிய தொகைக்கு விற்றுவிட்டனர். அதற்கேற்றபடி திருமணம் நடந்து முடிந்ததும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டனர். வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட்டார்கள்.
அவர்களது திருமணம் ஓடிடியில் வரும் என்று சொல்லப்பட்டது.

நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ் :-

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அனுமதி இல்லாமல் பிரபலங்கள் வாழ்த்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட காரணத்தால், அவர் ஒப்பந்தத்தை மீறியதாக நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

-விளம்பரம்-

ஸ்பான்சர்ஷிப் முறையில் திருமணம் :-

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண செலவு மொத்தத்தையும் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. திருமண ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்கள் செலவு, பாதுகாப்பிற்காக செக்யூரிட்டி சம்பளம் , ஒருவருக்கான திருமண சாப்பாடு செலவு 3800 ரூபாய் என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவு செய்ததாம். இதுவரை இப்படி ஒரு ஸ்பான்சர்ஷிப் திருமணத்தை தமிழ் சினிமா கேள்விப்பட்டதில்லை.

தாலி எடுத்து கொடுத்த சூப்பர் ஸ்டார் :-

திருமண நிகழ்வின் போது நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகிறது. சந்திரமுகி, தர்பார், அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்புறவு இருந்ததால் தனது வாழ்வின் முக்கியமான தருணத்தில் தாலி எடுத்துக் கொடுத்ததாக செய்திகள் வந்தது.

Advertisement