மணிமேகலையே கலாய்த்த ராமர் – புகழ். எப்படி இருந்த ஷோவ இப்படி வன்மம் புடிச்ச ஷோவா ஆகிட்டாங்களே, புலம்பும் ரசிகர்கள்

0
330
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி நான்கு சீசன்கள் கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், தயாரிப்பு நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன், மணிமேகலை தான் தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி 5:

அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, டிடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதேபோல் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிகா, KPY வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புதுப்புது கான்செப்ட் வழங்கி இருந்தார்கள். கடந்த வாரம் செமி பைனல் நடைபெற்றது. அதில் பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், அக்ஷய் கமல் ஆகியோர் களம் இறங்கி மோதி இருந்தார்கள். அதில் நடிகர் அக்ஷய் கமல் குறைவான மதிப்பெண்களை பெற்று போட்டியிலிருந்து வெளியேறி இருந்தார். இறுதிப் போட்டியாளர்களாக பிரியங்கா தேஷ் பாண்டே, இர்ஃபான், சுஜிதா ஆகிய மூவரும் தேர்வாகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி ப்ரோமோ:

இதற்கிடையில் நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், புகழ் ஆங்கரிங் செய்கிறார். அப்போது அவர், போன வாரம் ரெண்டு குக்கை எடுத்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் ராமர் எடுத்திருக்கிறோமா? ஃபைனலிஸ்ட் என்று சொல்லுங்கள். எதற்கு தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என்று கேட்க, ஒரு ஆங்கரிங் வேலையை செய்ய விடுங்கள் என்று மணிமேகலை- பிரியங்கா இடையே நடக்கும் சர்ச்சையை புகழ்- ராமர் இருவருமே காமெடியாக பேசி இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் கருத்து:

இதற்கு நெட்டிசன்கள், இந்த நிகழ்ச்சிக்கு இருந்த மரியாதையே போய்விட்டது. முந்தையை நான்கு சீசன்கள் இருந்த அளவிற்கு இந்த சீசன் இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேருடைய மன அழுத்தம் குறைந்தது. ஆனால், இப்போது இன்னும் அதிகமாகிறது என்றெல்லாம் விமர்சித்தும் கிண்டல் அடித்தும் வருகிறார்கள். இதற்கு காரணம், கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் பரவும் மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான். ஆங்கரிங் வேலையில் பிரியங்கா தலையிட்டதால் தான் நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை வெளியேறி இருந்தார் என்று கூறப்பட்டது. இதை அடுத்து சிலர் மணிமேகலைக்கும், சிலர் பிரியங்காவிற்கும் ஆதரவாக குரல் கொடுத்தது சோசியல் மீடியாவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement