மேட்டர் இல்லையா.? கமலை கிண்டல் செய்த பாஜக நாராயணனை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

0
2704
Actor Kamal

என்றும் இல்லாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சியினரின் அலப்பறைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்வது, மக்களை திசை திருப்புவது, பேஸ்புக் பக்கங்களுக்கு பணம் கொடுத்து சில கட்சிகளுக்கு எதிராக போஸ்ட் போடுவது என நினைத்ததை எல்லாம் செய்து வருகின்றனர்.

இத்தனைக்கும் பலமுறை மிகவும் கீழ்த்தரமான சென்று ஒருவரை விமர்சனம் செய்வது என பல வேலைகளை செய்து வருகின்றனர். தற்போது அதேபோல் ஒரு செயலை செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி.

கமல்ஹாசன் ஆரம்பித்த கட்சியின் மேடையில், இனிமேல் உங்களுக்கு குவாட்டரும் கிடையாது, ஸ்கூட்டரும் கிடையாது.. என மக்களிடம் கூறினார்.

வழக்கம் போல தரக்குறைவாக விமர்சனம் செய்யும் நாராயணன், குவாட்டரும் இல்லை, ஸ்கூட்டரும் இல்லை என்றால்..மேட்டர்? என மிக கீழ்த்தரமான ஒரு விமர்சனத்தை வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நெட்டிசன்கள் அவரை வகையாக வச்சு செய்து வருகின்றனர்.