நெட்டிசன்கள் கொண்டாடும் ‘மெய்யழகன்’ படத்தின் நீக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சி

0
230
- Advertisement -

‘மெய்யழகன்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் படும் தோல்வி அடைந்தது. ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’. பிரேம்குமார் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ’96’திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி, தேவதர்ஷினி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

- Advertisement -

மெய்யழகன் படம்:

மேலும், இந்த திரைப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தில் நடிகர் அரவிந்த்சாமி சொத்து பிரச்சனையின் காரணமாக உறவினர்களுடன் சண்டை போட்டு தன்னுடைய சின்ன வயதிலேயே, தான் உயிருக்கு உயிராக நேசித்த வீட்டையும் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விடுகிறார். பின் தங்கை உடைய திருமணத்திற்காக 27 ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு வர வேண்டிய கட்டாயம் வருகிறது.

படத்தின் கதை:

அப்போது தான் கார்த்தி உடைய என்ட்ரி ஆரம்பிக்கிறது. ‘அத்தான் அத்தான்’ என்று அரவிந்த் சாமியை கார்த்தி செல்கிறார். ஆனால், அவரின் பெயரை தவிர வேற ஒன்றும் அரவிந்த்சாமிக்கு தெரியவில்லை. இருந்தாலும் கார்த்தி மனது கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தெரிந்தது போல காட்டிக் கொள்கிறார் அரவிந்த்சாமி. பின் கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்சை அரவிந்த் தவற விடுகிறார். அதன் பின்னர் அவருடனே அரவிந்த்சாமி தங்கி வருகிறார்.

-விளம்பரம்-

நீக்கப்பட்ட காட்சிகள்:

ஒரு இரவு முழுவதும் கார்த்தியுடன் நேரத்தை செலவிட்ட அரவிந்த்சாமி, கடைசியில் கார்த்தி யார் என்று தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. இப்படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், நீளம் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தன. இந்நிலையில், படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவெடுத்து, 18 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து படக்குழு நீக்கி இருந்தது.

நெட்டிசன்கள் கொண்டாடுகிறார்கள்:

அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ‘மெய்யழகன்’ திரைப்படம் நெட் ஃப்லிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. பின் சமீபத்தில், படத்தில் நீக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நினைவுகளை நினைவுகூர்ந்த கார்த்தியின் காட்சிகளும் நெட் ஃப்லிக்ஸில் வெளியிடப்பட்டது. தற்போது, படத்திலிருந்து நீக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகளை ஓடிடியில் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு, இந்த கட்சிகளை ஏன் படத்தில் இருந்து நீக்கினீர்கள், இந்த படம் 5 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் கூட நாங்கள் கொண்டாடுவோம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement