தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்னர் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஏனெற்றால் மற்றோரு முன்னணி நடிகரான அஜித் நடித்த துணிவு படமும் அன்று தான் வெளியாகியது. இதனால் தமிழ் நாடு முழுவதும் ஆராவாரமாக இருந்தது.
இந்த பெண் தனக்கு பிடிச்ச ஹீரோ படத்தை தியேட்டர்ல பார்த்துட்டு, மைக்ல அதை பத்தி பேசிட்டாங்கன்னு மிரட்டி மன்னிப்பு கேட்க வெச்சிருக்கானுக..
— Second Show (@SecondShowTamil) January 12, 2023
RSS பண்றது மட்டும் சங்கீத்தனம் இல்ல.. இது அதைவிட
1/2 pic.twitter.com/LPW9CNb3H7
வைரலான வீடியோ :
இந்த நிலையில் துணிவு அதிகாலை 1 மணிக்கும் வாரிசு காலை 4 மணிக்கும் வெளியானது. இதனால் எந்த படம் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறினார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண் தமிழ் நாட்டிற்க்கே வாரிசு விஜய் தான் தளபதிக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.
ஆனால் திடீரென அந்த பெண் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தான் இஸ்லாமிய முறைப்படி தவறு செய்து விட்டதாகவும் இதை போன்று இனி செய்யமாட்டேன் என்றும் அதற்க்காக அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதகவும், நீங்களும் என்னுடைய இந்த பாவம் போவதற்கு அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த வீடியோ வைரலான நிலையில் “மூடர் கூடம்” இயக்குனர் நவீன் இந்த விஷயம் குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படம் பார்த்தது குற்றம்னு இந்த பெண்ணை புடிச்சி மிரட்டி …படம் பார்த்தது தப்புனு வீடியோ போட வச்சிருக்கானுங்க பாய்ங்க..டே பாய்ங்களா நீங்க சங்கியா இருந்துக்கிட்டு மத்தவனை திட்டலாமாடா… pic.twitter.com/pNODaHYUVD
— Schumy Vanna Kaviyangal (@Schumy_Official) January 12, 2023
மூடர் கூடம் நவீன் :
‘மூடர் கூடம்’ மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. அந்தப் இன்றளவும் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.
அலாவுதீனின் அற்புத கேமரா :
முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. பிக் பாக்கெட் அடிப்பவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி.இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
— DirectorNaveen (@NaveenFilmmaker) January 12, 2023
pic.twitter.com/sYofBTgv5Y
நவீன் ட்விட்டர் பதிவு :
இந்த நிலையில் தான் இஸ்லாமிய பெண் போட்டிருந்த வீடியோ பதிவை டேக் செய்த இயக்குனர் நவீன் `இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும். இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம்
நெட்டிசன்களின் கருத்து :
எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும் என்று மூடர் கூடம் நவீன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்றாலும் மறுபக்கம் “இது தேவையில்லாத ஆணி” என்று நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது இயக்குனர் நவீன் பதிவிற்கு எழுந்த்து வருகிறது.