மேஜர் முகுந்த் வரதராஜனின் பின்னணி மறைக்கப்பட்டது ஏன்- அமரன் குறித்து நெட்டிசன்கள் கேள்வி

0
187
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் தான் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படம்.

-விளம்பரம்-

இப்படத்தில் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என பாராட்டுவதற்கு ஏராளமான அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,இணையவாசிகள் படம் முழுக்க நெருடலை ஏற்படுத்தக் கூடிய சில பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படத்தின் கதாபாத்திரங்களை திரையில் காட்டியதில் நம்பகத்தன்மை இல்லை என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

படத்தின் கதாபாத்திரங்கள்:

அதாவது படத்தில் இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களில் சாய்பல்லவி கதாபாத்திரமும் ஒன்று. அவர் மேஜர் முகுந்தின் மனைவி, இந்து ரபேக்கா வர்கீஸ் என்று ஒரு கிறிஸ்டியன் பெண்ணாக படம் முழுவதும் காட்டப்பட்டுள்ளார். படத்தில் வரும் இந்துவின் பெற்றோர் வீடாகட்டும், திருமணத்திற்குப் பிறகு அவர் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டின் சுவற்றில் கூட தொங்கும் இயேசுவின் படம் ஆகட்டும், இப்படி படம் முழுக்க அவர் ஒரு கிறிஸ்டியனாக மிகவும் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முகுந்தின் கதாபாத்திரம்:

ஆனால், இந்த விவரிப்புகள் மேஜர் முகுந்தாக நடித்த சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் ஏன் இல்லை என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை திரையில் காட்டவில்லை. படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனும் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை அவரது சொந்த அடையாளத்துடன் காட்டுவதில் தயக்கம் காட்டியுள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

‘நைனா’ என்று அழைத்தது ஏன் :

அதோடு படம் முழுக்க சிவகார்த்திகேயன் அவரது தந்தையை ‘நைனா’ என்று அழைப்பது திட்டமிட்டு திணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முகுந்த் ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் மறைக்கப்பட்டு, படத்தில் முகுந்தின் தாய் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட அவர் ராணுவத்தில் சேர்ந்த பிறகும் கூட தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதாக கட்டியுள்ளார்கள். சாய் பல்லவியின் கதாபாத்திரத்தை தெளிவாக இருக்கும் போது, சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தின் உண்மை அடையாளத்தை திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது பயோபிக் படமா:

இப்படி இருக்கும் நிலையில் இப்படத்தை எவ்வாறு உண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக் என்று கூற இயலும். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்திலும் நிகழ்ந்தது. தமிழ் பிராமண சமூகத்தைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத்தின் கதாபாத்திரம் அந்த படத்தில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவராகவும், இன்னும் ஒரு படி மேளா போய் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராகவும் காட்டப்பட்டிருந்ததையும் தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement